மானம் போகும் பாதை

உலகிலேயே மிகவும் கஷ்டமான காரியம் எது? என்னைக் கேட்டால் காய்கறி வாங்குவதுதான் என்று சொல்வேன். இது அத்தனை துல்லியமான பதில் இல்லை. இன்னும் சரியாகச் சொல்லுவதென்றால் மனைவி குறை கண்டுபிடிக்காதபடிக்குக் காய்கறி வாங்குவது. திருமணமாகி ஒரு முழு வனவாசகாலம் கடந்துவிட்ட பிறகும் இந்தக் கலையில் நான் ஒரு பெரிய இந்திய சைபர் என்பது என் மனைவியின் தீர்மானம். அநேகமாக இதைப் படித்துக்கொண்டிருக்கும் அத்தனை உத்தமோத்தமக் கணவர்களின் மனைவிகளும் அவ்வண்ணமே தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கக்கூடும். அவர்களுக்கெல்லாம் என் ஆழ்ந்த … Continue reading மானம் போகும் பாதை